வீட்டுப்பாடம் செய்யாத மாணவியின் உடைகளை அவிழ்க்கவைத்த மாஸ்டர்

வீட்டுப்பாடம் செய்யாததால் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் ஆடையை அவிழ்கச் சொல்லி மிரட்டிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ராஜஸ்பூர் மண்ட் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்று உள்ளது.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ஜெயின் சமூகம் சார்பில் நிதி வழங்கப்பட்டு இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், வீட்டுப் பாடம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த வகுப்பு ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த சிறுமியின் மேலாடையை அவிழ்க செய்துள்ளார்.

ஆசிரியரின் இந்த செயலை அறிந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad