கொடிய விலங்குகளுக்கு கை குழந்தையை இரையாக போட்ட பெற்றோர்:

இந்தியாவில் ஒரு மாத கைக்குழந்தையை மிருகங்கள் வாழும் காட்டில் வீசிச்சென்ற பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டின் வழியாக பொது மக்கள் சிலர் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்த போது 1 மாத கை குழந்தை அங்குஉடனே குழந்தையை மீட்ட அந்த மக்கள் அதை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். 2 கிலோ எடை மட்டும் இருந்த குழந்தைக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த குழந்தையை பேருந்தில் எடுத்து வந்து அதன் பெற்றோரே காட்டில் போட்டிருப்பது தெரியவந்தது.

அவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாத நிக்லையில், காட்டில் வாழும் கொடூர மிருகங்கள் அந்த குழந்தையை கொல்ல வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம் என தெரியவந்துள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad