சிரியாவில் ஒரே தாக்குதலில் 33 பேர் கொத்து கொத்தாக பலி!

சிரிய தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தவர்கள் மீது, அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலில், 33 பேர் பலியாகிவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின், அல்மன்சோரா நகரிலுள்ள பாடசாலை கட்டிடத்தின்மீது, அமெரிக்க சார்பு விமானப்படை நடத்திய தாக்குதலில், 33 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் அமெரிக்க தரப்பால், சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்தே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலெப்போ, ஹோமஸ் மற்றும் மேற்கு ரக்கா பகுதியிலிருந்து, தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகளாக கருதி, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad