அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

பிணங்கள், எலும்புக் கூடுகளை கடத்தும் கொள்ளையர்கள் சிக்கினார்கள்!

பிணங்களை கடத்தும் நான்கு நபர்கள் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, 18 மனித எலும்புக் கூடுகளையும், கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட மனித எலும்பு பாகங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மனித எலும்புக் கூடுகள் நீரினால் நன்றாக கழுவப்பட்டு மிகவும் சுத்தமான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் சர்வதேச கடத்தல் காரர்களுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களின் மயானங்களில் இருந்தே பிணங்களையும், எலும்புக் கூடுகளையும் கடத்துவதாக முதல் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடத்தப்படும் எலும்புக் கூடுகள் சர்தேச கடத்தல்காரர்களிடம் கூடுதலான பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 2006 ஆண்டில் குறித்த மாநிலத்தில் அதிகளவு பிணங்கள் கடத்தப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் உள்ள கல்லறைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமையால் கலவரம் வெடித்தது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மண்டையோடுகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்தப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் குறித்த கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.