கேரளாவில் தொடரும் கொடூரம்: 8-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த ஆசிரியர் கைது

கேரளாவில் சமீப காலமாக பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், கோழிக்கோட்டில் 8-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் தொடரும் கொடூரம்: 8-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த ஆசிரியர் கைது திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு பெண்கள் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் படிக்க சென்ற இடத்தில் ஆசிரியரே ஒரு மாணவியை கற்பழித்த கொடூர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. இதை தொடர்ந்து அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் மாணவியின் வீட்டிற்கு சென்று அதற்கான காரணத்தை விசாரித்துள்ளார். அப்போது அந்த மாணவியை அந்த பள்ளியின் ஆசிரியர் கற்பழித்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

அந்த மாணவி படித்த பள்ளியில் கோழிக்கோடு வெள்ளாரக்கோணம் பரம்பில் என்ற இடத்தை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 46) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அந்த மாணவியை கழிவறைக்கு அழைத்துச்சென்று மிரட்டி கற்பழித்து உள்ளார். சிலநாட்கள் இந்த கொடூரம் தொடர்ந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மகளின் எதிர்காலம் கருதியும் வெளியில் சொல்ல அவமானப்பட்டும் தங்கள் மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இந்த தகவல்களை கேட்டறிந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்து இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார்.

அவர் சைல்டு லைன் அமைப்பு மூலம் கோழிக்கோடு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனடியாக போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பெரோஸ்கானை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் பல மாணவிகளிடம் அவர் இது போல நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் கேரளாவில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கேரள அரசு தலைமை செயலகம் முன்பு பாரதிய ஜனதா மாநில தலைவர் கும்மனன்ராஜ சேகரன் தலைமையில் பாரதிய ஜனதா மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கும்மனன் ராஜசேகரன் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மாநிலத்தில் அரசியல் கொலைகளும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்களும் அதிகரிப்பதாக கூறினார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad