அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

முதலையின் வயிற்றுக்குள் கிடந்த சிறுவனின் எச்சங்கள் !

முதலையொன்றைக் கொன்று அதனது வயிற்றைக் கிழித்த கிராமவாசிகள் அதற்குள் அந்த முதலையால் தாக்கப்பட்டு உண்ணப்பட்ட 8 வயது சிறுவன் ஒருவனின் சடல எச்சங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் சிம்பாப்வேயில் இடம்பெற்றுள்ளது.

வட சிம்பாப்வேயில் மாஷோனாலாண்ட்டிலுள்ள முஷும்பி தடாகத்திலிருந்த குறிப்பிட்ட முதலையே குறிப்பிட்ட் சிறுவனது மரணத்துக்குக் காரணம் என சந்தேகித்த பிராந்திய பொலிஸார் அதனை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அந்த முதலையின் வயிறு கத்தியால் கிழிக்கப்பட்ட போது அதற்குள் அதனால் கொல்லப்டபட்ட சிறுவனது எச்சங்கள் காணப்பட்டன.

சிம்பாப்வேயில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் அந்த ஆறுகளிலிருந்த முதலைகள் கிராமங்களுக்குள் பிரவேசித்துள்ளன.