அத்தனை தீவிரவாதிகளுக்கும் சாவு! ஆளில்லா விமானத் தாக்குதல் ரெடி

அமெரிக்க புலனாய்வு மையத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன் தாக்குதல்) மூலம் தீவிரவாதிகளை தாக்குவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் மற்றும் புலனாய்வு மையம் என்பவை தமது முடிவுகளை இதுவரையும் வெளியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் கொள்கைக்கு எதிராக டொனால்ட் ட்ரம்பின் குறித்த நகர்வானது அமைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா தனியொரு நாட்டுக்கான ஆளில்ல விமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை விட, உலக நாடுகள் அனைத்துக்குக்கும் சேர்த்ததாக ஒரு ஆளில்லா விமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முற்பட்டதுடன், ஏனைய நாடுகளையும் தனியொரு கொள்கையை அமுல்படுத்தவிடாது தடுத்தார்.

எனினும் தற்போது ட்ரம்ப் குறித்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி அமெரிக்காவுக்கான தனியொரு கொள்கையை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்துவருகின்றார். அமெரிக்கா இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நியுவ்யோர்க் மற்றும் வொஷிங்டன் பிரதேசங்களிலுள்ள தீவிரவாதிகளை தாக்குவதற்கு ஆளில்ல விமானங்களை கையாண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad