ஹெஃட்போன் வெடித்து இளம்பெண்ணின் முகம் சிதறியது

நடு வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், பெண் பயணியொருவர் அணிந்திருந்த ஹெட்போன் திடீரெனத் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீஜிங்கில் இருந்து மெல்போர்னுக்குப் பறந்துகொண்டிருந்த விமானத்தில், பெண் ஒருவர் ஹெட்ஃபோன் அணிந்து பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார்.

திடீரென அந்த ஹெட்ஃபோனின் இடது பக்கம் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சியுற்ற அந்தப் பெண், ஹெட்ஃபோனைக் கழற்றி கீழே வீசினார். அப்போதும் அதனுள்ளிருந்து புகையும் சிறு தீப்பிழம்பும் எழுந்தவண்ணமே இருந்தது. உடனே அங்கு வந்த விமானப் பணிப்பெண் சிறிதளவு தண்ணீரை ஊற்றி அந்தத் தீயை அணைத்தார். எனினும், வெடித்த மாத்திரத்தில் உருகிய அந்த ஹெட்ஃபோன் விமானத்தின் தரையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது.

இதற்கிடையில், ஹெட்ஃபோன் வெடித்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் இடப்பக்கக் கன்னம் தீயினால் இலேசாகக் கருகிவிட்டது. பற்றரியால் இயங்கும் அந்த ஹெட்ஃபோனை சுமார் இரண்டு மணிநேரம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்ததாலேயே அது வெடித்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.