இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ஜெனிவாவில், மார்ச் 22-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 2009-ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, அந்நாட்டு அரசு மேலும் 18 மாத காலம் அவகாசம் கேட்க உள்ளது. இதனை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து சர்வதேச விசாரணை கோரி வந்ததை இலங்கை மறுத்துவரும் நிலையில், தற்போது உள்நாட்டு விசாரணையையும் தாமதப்படுத்திவருகிறது.

இதைக் கண்டித்து, வைகோ சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, 'ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மாநாட்டில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்படக்கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad