அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

சனி தோஷம் நீங்க- இந்த கோவிலுக்கு செல்லுங்கள்

இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் பலன்கள், பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் நம் முற்பிறவி பலன் தான் என ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு பிறவியில் நாம் செய்யும் தவறின் பலனை ஏழு ஜென்மங்களுக்கு அனுபவிப்போம் என பெரியவர்கள், ஞானிகள் சொல்ல கேட்டிருப்போம்.

துர்மரணம் அடைந்தவர்கள், பல பாவங்களை செய்து இறைவனின் சாபத்தினை பெற்றவர்களே மீண்டும் பிறக்கின்றனர் எனவும் கூறுகின்றனர்.

அறிவியலில் இது நிரூபிக்க இயலாத உண்மை, எனினும் உலகில் பெரும்பாலானோர் இதனை நம்பி அதற்காக பரிகாரமும் செய்கின்றனர்.

முந்தைய பிறவியின் பாவத்தினை போக்குவதற்காக முன்னோர்கள் பல வழிமுறைகள் கூறியதோடு அதற்காக பல கோவில்களையும் கட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயத்திற்கு சென்று வழிப்பட்டால் முன் ஜென்மபாவங்கள் நீங்கும், புதுவீடு கட்டுவதற்கான யோகம் கிடைக்கும்.

அக்னிக்கு உருவசிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இது தான். அப்பர், சம்பந்தர், திருநீலநாயனார், சிறு தொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய பாவங்களை போக்கும் புண்ணிய தளமாகும்.

இக்கோவிலில் அம்மனுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் எனவும், கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால் சனி தோஷம் தீரும் என்றும் நம்பப்படுகிறது.


சதய, ஆயில்ய நட்சத்திரத்திலும், தனுசு ராசியில் பிறந்தவர்களும் ஒரு முறையாவது இக்கோவிலுக்கு சென்றுவந்தால் பிறவி பலனை அடைவர். கன்னி ராசிகாரர்கள் கட்டாயம் செல்லவேண்டும்.

இங்கு உள்ள சித்தரின் சமாதியில் 18 சித்தர்கள் அமர்ந்து வழிப்பட்டதால் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுகிறது.

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.

இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என கூறுகின்றனர்.