அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

எல்லை மீறும் வடகொரியா!! மற்றுமொரு பிரமாண்ட ராக்கெட்.

வடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் என்ஜின் பரிசோதனையை நடத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இம்மாத முற்பகுதியில் இதேபோன்றதொரு பரிசோதனையை வடகொரியா நடத்தியிருந்தது. உயர் உந்து திறன் கொண்ட இந்த ரொக்கெட் என்ஜினின் வருகையானது ஏவுகணைச் சரித்திரத்தில் புதியதொரு பரிணாமம் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது, வடகொரியாவின் ஆயுதப் பரிகரணத்தின் முன்னேற்றத்தின் அறிகுறியே என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியா நடத்திவரும் இதுபோன்ற பரிசோதனைகள் அமெரிக்காவை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.