பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற சிறுமி தற்கொலை! பின்ணனியில் அதிர வைத்த உண்மை!!!!

மதுரை அருகே சிறுமி ஒருவர் தனது அக்காவின் கணவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுள்ளார். குழந்தை பெற்றுக்கொண்ட அந்த சிறுமி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் பெரியார் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தை பார்த்து அங்கு நுழைந்த சிறுமியின் அக்காவின் கணவர் 28 வயதான லட்சுமணன் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தனது அக்காவின் கணவரால் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உடனடியாக வீட்டில் அந்த சிறுமி சொல்லவில்லை. இதனால் சிறுமி கர்ப்பமடைந்த பின்னரே அது தெரியவந்தது. இதனையடுத்து லட்சுமணன் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அந்த சிறுமி குழந்தை பெற்றுள்ளார். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மனமுடைந்து நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.