இந்த அறிகுறிகளை வைத்து பெண்கள் அவன் தன்னை விரும்புகிறான் என அறிந்துக் கொள்வார்கள்!

பெண்களின் மனதை ஆண்கள் அறிவது தான் கடினமே தவிர, ஆண்களின் மனதை அறிவது பெண்களுக்கு மிக எளிதான ஒன்று. நீங்கள் ப்ரபோஸ் செய்து தான், காதலிப்பதை அவர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. Loading ad நீங்கள் அவருடன் பழகும் போது செய்யும் செயல்களை வைத்தும், நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை வைத்துமே பெண்கள், ஒருவர் தன்னை விரும்புகிறாரா? இல்லையா? என தெரிந்துக் கொள்வார்களாம். அப்படி, ஆண்களிடம் “அவன் நம்மல லவ் பண்றான் போல…” என வெளிப்படும் அறிகுறிகள் என பெண்கள் கூறும் 9 விஷயங்கள்…

ரெண்டு தடவ…! ஒரு மெசேஜ் அனுப்பினால் அதற்கு கசகசவென பலமுறை ரிப்ளை செய்தால்… கன்பார்மாக நீங்கள் அவரை விரும்புவது அப்பட்டமாக தெரிந்துவிடும். தெரியக் கூடாதுன்னு நெனச்சா பார்த்து பக்குவமா நடந்துக்குங்க… இல்லாட்டி ஃப்ரீயா விடுங்க…

அணைப்பு! சாலை கடக்கும் போது, ஏதேனும் வாகனம் வேகமாக வரும் போது, யாராவது உரசுவது போல நெருங்கும் போது, அவரது கைகளை / தோளை பற்றிக் கொண்டு பாதுகாப்பதை வைத்தும் பெண்கள் அவன் தன்னை விரும்புகிறான் என்பதை அறிகிறார்.

மொபைல்! அவர்களுடன் வெளியே செல்லும் போது, எங்கேனும் பார்த்து பேசும் போது, அவரிடம் பகிர்ந்துக் கொள்ளும் தருணங்களில் உங்கள் மொபைல் அழைப்புகளை தவிர்ப்பது, மொபைலை பயன்படுத்தாமல் இருப்பதை வைத்து நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள்.

பிடித்தவை! எனக்கு இதெல்லாம் பிடிக்கும்… இதெல்லாம் நான் விரும்பி செய்வேன் என. உங்களுக்கு பிடித்த எல்லாவற்றையும் அவர்களிடம் பகிர்வதை வைத்து நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்கிறார்கள் பெண்கள்.

விண்ணைத் தாண்டி…! நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ… போ… போ… என மார்கெட், சினிமா, ஷாப்பிங் என ஹட்ச் நாய் குட்டி போல ஒரு முறை கூட முடியாது, பிஸி என கூறாது அழைக்கும் இடமெல்லாம் பின்னாடியே போய் கொண்டிருந்தால் அவன் நம்மல லவ் பண்றானோ என்ற சந்தேகம் பெண்கள் மனதில் எழ துவங்கிவிடும்.

விட்டு செல்லுதல்…! எங்கேனும் வெளியே சென்று திரும்பும் போதோ அல்லது அவரது வீடு சென்று திரும்பும் போதோ உங்கள் பொருளை தவறிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் அவரை விரும்புவதை அவரது குடும்பமே அறிந்துக் கொள்ளும்.

மிஸ் யூ…! ஒரு நாள் பிரிந்தாலும், பேச முடியாமல் போனாலும் மிஸ் யூ என செய்தி அனுப்பும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் அவரை விரும்புவதை அறிந்துக் கொள்வார். ஆழமான நட்பிலும் இது இருக்கும் என்றாலும், ஆண்களிடம் ஆண் நண்பர்களுக்கு மிஸ் யூ சொல்லும் வழக்கம் கிடையவே கிடையாது.

அறிமுகம்! உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் அவரை அறிமுகம் செய்து வைத்து அசடுவழிய சிரிப்பதை பார்த்தால் இன்ஸ்டன்ட்டாக நீங்கள் விரும்புவதை பெண்கள் அறிந்துக் கொள்வார்கள்.

அருகாமையில் தங்க…! என்றாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா. லேட் நைட், அவர் வீட்டிலேயே தங்கிடலாம் என நீங்கள் ப்ளான் செய்வதை அறிந்தால், நீங்கள் அவரை விரும்புவதை அவர் அறிந்துக் கொள்வார்.
Tags

Top Post Ad

Below Post Ad