உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை…. வெளியாகிய அதிர்ச்சி காரணம்..!!

சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இளம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து கொதித்தெழுந்த மாணவர்கள், பல்கலைக்கழகத் தளபாடங்களுக்குத் தீவைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பல்கலையில் அண்மையில் பரீட்சை ஒன்று நடைபெற்றுள்ளது. இதில், விடைகளைப் பார்த்து எழுதியதாகக் கூறி பதினெட்டு வயது மாணவி ஒருவரை பரீட்சை கண்காணிப்பாளர் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, நேற்று (22) மாலை பல்கலைக்கழக விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவியின் இரட்டைச் சகோதரரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் மாணவர்களிடையே பரவியதால் கொதித்தெழுந்த மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் உள்ள தளபாடங்களுக்குத் தீவைத்தனர்.

இன்று அதிகாலை வரை தொடர்ந்த போராட்டங்கள், பொலிஸாரின் வருகையுடன் கைவிடப்பட்டன.

மாணவியின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.