ஆண்களுக்கு மட்டும் இந்த மெசேஜ்களை தப்பி தவறி கூட அனுப்பி விடாதீர்கள்!!

இன்றைய காலம் முற்றிலும் செல்போன் மயமாகிவிட்டதெ என்றே கூறலாம். வெளியூர் செல்ல டிக்கெட் புக் செய்வதிலிருந்து, ஒரு பொருளை வாங்குவது வரை அனைத்தும் செல்போனிலேயே செய்து விடலாம்.

அதுபோல, செல்போன் இருப்பதால், நலம் விசாரிப்பது கூட மெசேஜ் மூலமாக விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். காதலாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும், சரி ஒரு ஆணிற்கு செல்போன்களின் மூலம் பெண்கள் சொல்லக் கூடாத விஷயங்கள் இங்கு கூறப்பட்டுள்ளது. அதை பற்றி பார்ப்போம்..

ஆண்களிடம் பெண்கள் சொல்லக் கூடாத விஷயங்கள் என்ன?
நாம் இரண்டு பேரும் உடனே பேச வேண்டும் என்ற குறுஞ்செய்தியை தன்னுடைய ஆண் நண்பருக்கு ஒரு பெண் அனுப்பினால், அதற்கு ‘it’s over’ என்று ஆண்களால் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது காதல் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு திக் என்ற மனநிலையை ஆண்களுக்கு கொடுப்பதால், இந்த வார்த்தையை தவிர்க்க வேண்டும்.
நான் வருவதற்கு தாமதமாகும் என்ற ஒரு குறுஞ்செய்தியை எந்த காரணமும் இல்லாமல் அனுப்பி வைத்தால், அது ஆண்கள் பலவித அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே இப்படி ஒரு தகவலை அனுப்பக் கூடாது.

உண்மையிலேயே உனக்கு என்னைப் பிடிக்குமா? பெண்கள் அனைவரிடத்திலும் முதலில் இருப்பது இந்த வார்த்தை தான். ஆனால் அது ஏதாவது ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் பெண்கள் பெரும்பாலும் இப்படி கேட்பார்கள் என்பது ஆண்கள் எடுத்துக் கொள்வார்கள்.

எல்லாம் முடிந்தது அல்லது இதோடு முடித்துக் கொள்வோம் இப்படி ஒரு மெசேஜை எந்த ஆண்களுக்கு அனுப்பினாலும் அதற்கு உறவு முறிந்தது என்று தான் அர்த்தம். இப்படி அனுப்பிய மெசேஜிற்கு பதில் வரவில்லை என்றால், நீங்கள் பயப்படத் தயாராக வேண்டியிருக்கும். எனவே, எக்காரணம் கொண்டும் நல்ல உறவில் உள்ள ஆண்களுக்கு இப்படி ஒரு மெசேஜை அனுப்பி விடாதீர்கள்.
அடுத்து என்ன செய்ய இருக்க? இந்த வார்த்தை ஆண்களை இரண்டு விதத்தில் யோசிக்க வைக்கும். ஆண் நண்பரை பார்க்க விருப்பம் இல்லாமல் இருப்பது அல்லது அவர் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள் என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

நான் உன்னை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் இந்த பழமையான வார்த்தையை எப்பொழுதும் SMS ல் அனுப்பாதீர்கள். ஏனெனில் அவளுக்கு என்மீது ஏதோ சந்தேகம் இருக்கு என்று ஆண்களை யோசிக்க வைக்கும்.
என்னை உனக்கு பிடிக்கலையா? நீ என்னை வெறுத்து விட்டாயா? என்ற மெசேஜை அனுப்பி வைத்து விட்டு, காத்திருக்கும் போது, அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல என்று ரிப்ளை வரும். கண்டிப்பாக அந்த பதில் வெறுப்பு வார்த்தையாகவும், வெற்று வார்த்தையாகவும் தான் இருக்கும். அதற்கு இது போன்ற மெசேஜை அனுப்பாமலே இருக்கலாம்.

நான் உன்னை விரும்புகிறேன். என்று முதல் முதலில் ஒருவரிடம் உங்கள் காதலை சொல்லும் போது, அதை SMS மூலமாக சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காதலை அவரிடம் நேரில் சொன்னால், உண்மையான, உணர்ச்சிகரமான அனுபவத்தை பெற முடியும்.

பழைய மெசேஜினை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது இருவருக்கும் இடையில் மனஸ்தாபத்தை ஏற்படுத்தி, அது பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.
பக்கத்தில், எதிரில் இருக்கும் போது மெசேஜ் அனுப்பி பேசக் கூடாது. நேரடியாக எதையும் பேசிவிடுவது நல்லது. ஏனெனில் அருகில் இருக்கும் போது மெசேஜ் செய்து பேசும் போது, அவரை பார்க்க பிடிக்காமல் தவிர்ப்பதாக பொருள் கொள்ளப்படும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad