உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அப்பாவைக் கொட்டனால் மண்டையில் தாக்கி ஆசுப்பத்திரிக்கு அனுப்பிய மகள்!!

கொட்டான் பொல்லினால் மேற்கொண்ட தாக்குதலில் தந்தையின் மண்டை பிளந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் 09.11.2017 அன்று மாலை 4:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் ஓடை லேன் பகுதியினை சேர்ந்த நாகலிங்கம் பாலச்சந்திரன் வயது(69) என்ற முதியவரே தலையில் காயங்களுக்கு உள்ளானவர் ஆவார்.

வீட்டில் நின்ற வேளை தனது மகள் கீர்த்தனா பொல்லினால் தாக்கியதாக அவர் கூறினர்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்