அம்பாறையில் படுக்கையறைக் காட்சிகளைக் மாணவிக்கு காட்டிய அதிபருக்கு நடந்த கதி!!

அம்பாறை, உஹன பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதி அதிபர் தனது கையடக்க தொலைபேசியில் பாடசாலை மாணவியின் தொலைபேசிக்கு
ஆபாச காட்சிகளை அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தவறான குறுந்தகவல் அனுப்பிய குற்றச்சாட்டில் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக உஹன
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.