பிரான்சில் இருந்து யாழ் வந்த இளைஞன் கடலில் மூழ்கி மரணம்.

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில், உள்ள பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் நேற்று 08.05.2022 இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்தார். மதன் என்று அழைக்கப்படும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பிரான்ஸில் வசித்து வந்த நிலையில் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன பொலீஸ் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad