யாழில் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு!! இராணுவ சிப்பாய் தற்கொலை!

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார வயது 36 வத்தேகம பகுதியைச் சேர்ந்தவர் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. பலாலி படைத் தலைமையகத்திற்குள் உள்ள புத்த கோவிலுக்குள் குறித்த இராணுவ சிப்பாய் தூக்கிலிட்டு தற்கொலை புரிந்துள்ளார்.

மேலதிக விசாரணை இராணுவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிப்பாய் வெளிநாட்டு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண் தன்னுடன் தொடர்பினை துண்டித்ததால் தற்கொலை புரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் உடல் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.