விவேக் போன்று யாழில் உன்னத சேவை புரியும் ஆசிரியர்.


ஈழத்து கலைவாணர் என்னுமளவிற்கு நடிகர் விவேக் போன்று இயற்கையை நேசித்து Green Layer environmental organization எனும் பெயர் வைத்து நீர்வேலியில் ஆசிரியர் ஒருவரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. 

ஆரம்பித்த ஒரு வருடத்தில் 600 பயன் தரும் பெரு மரங்களை நாட்டி வெற்றியும் கண்டுள்ளார். இவருடைய இந்த செயற்பாட்டின் சிறப்பு என்னவென்றால், இவரால் தயார் செய்து நாட்டப்படும் மரங்கள் எந்த கால நிலைகளையும் தாக்குபிடித்து வளரக்கூடியவை. 

அதாவது பெரிய இரும்பு கலன்களை சீரமைத்து அதில் மரங்களை நாட்டி பாதுகாப்பாக குறிப்பிட்ட அளவு வளர்த்த பின்பே வாகனத்தில் ஏற்றி குறித்த இடங்களுக்கு கொண்டு சென்று நாட்டுவார். 

ஆரம்பத்தில் தன் சொந்த செலவில் இந்த இலவச மரம் நடுதலை செய்து வந்த இவருக்கு சமூக மட்டத்திலிருந்து ஆதரவும் ஊக்குவிப்பும் பெருகி வருவதால் இன்னமும் இந்த சேவையை திறம்பட செய்ய நல்ல உள்ளங்களை நாடி நிக்கின்றார். 

கொரோனா என்னும் கொடிய நோய் பரவி வரும் இந்த காலகட்டத்தில் இவருடைய சேவை மிக மிக கட்டாயமானது. மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது காற்றில் #ஒட்சிசனின் அளவு அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவினை பகிர்ந்து உங்கள் ஆதரவினை தாருங்கள்.

உங்களால் இயன்ற உதவிகளை வழங்கவும் இணைந்து செயற்படவும் தொடர்பு கொள்ளுங்கள். +94776621745Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad