71 மிதிவெடிகளை கண்டுபிடித்த எலி... விருது வழங்கி கௌரவிப்பு.


கம்போடியாவில் (Cambodia) 71 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்த பெருமையைப் பெற்றுள்ளது எலி ஒன்று… ஐந்தாண்டுப் பணிக்கு பிறகு அது ஓய்வுபெறவுள்ளதாக எலியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாவா என்ற அந்த எலி முதன்முதலில் APOPO எனும் அறநிறுவனத்தால் கண்ணிவெடிகளின் ரசாயனத்தைக் கண்டறிய பயிற்சிபெற்றது. கண்ணிவெடிகள் ஏதும் இருப்பதை மாகவா நுகர்ந்தால் அது நிலத்தைக் கீறும்.

அதன்வழி கண்ணிவெடிகள் இருப்பதை ஊழியர்களும் அறிந்துகொள்வர். 225,000 சதுர மீட்டர் அளவிலான நிலத்திலிருந்து கண்ணிவெடிகளை அகற்ற உதவியுள்ளது, மகாவா.

அது 42 காற்பந்துத் திடல்களுக்குச் சமம். மகாவாவுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆக உயரிய விருது வழங்கப்பட்டது. 77 ஆண்டுகளில் அந்த விருதைப் பெற்ற முதல் எலி மகாவா.