காருக்குள் கராத்தே மாஸ்டரின் பாலியல் பயிற்சி. அதிரடி கைது.

சென்னையில் தற்காப்பு கலை பயிற்சியகம் நடத்தி வரும் கெபிராஜ் என்பவர் 26 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. நாமக்கல்லில் போட்டிக்கு சென்று திரும்பும் போது காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒத்துழைக்காவிடில் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கெபிராஜ் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மாதம் 31ஆம் தேதி கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடிக்கு மாற்றி இருப்பதாக டிஜிபி திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.

கெபிராஜ் மீதான பாலியல் வழக்கிற்கு முன்னதாக, சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் பாலியல் வழக்கில் சிக்கினர்.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad