ஒரு தமிழ் குடும்பமே அழிந்துபோன கொடூரம். நடந்தது என்ன?

மாவெனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வயதான தந்தை மற்றும் தாயின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டிருந்தது.

மேற்படி பிரதேசத்தில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 23 வயது மகள், 29 வயது மகன் என 4 பேர் மண்சரிவில் புதையுண்டு காணாமல்போயிருந்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 23 வயதான மகளின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தது, தொடர்ந்து தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, இன்று பிற்பகல் அவரின் தந்தை, தாய் ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad