நம்மிடம் இருக்கும் பல திறமைகளில் பேச்சு திறமையும் ஒன்று. பலர் பேச்சை ஆயுதமாகவும், தங்களின் வாழ்வாதாரமாகவும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு நாட்டின் நல்ல தூதனுக்கு தேவையானது சரியாக சிந்தித்து ஒவ்வொரு வார்த்தையையும் எந்த ஒரு பாதகத்தையும் தராதவாறு பேச வேண்டும் என்பது விதி.
சிலர் மெளனமாக இருப்பார்கள் சிலர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் பலருக்கு ஒரு நபரின் அறிமுகம் கூட தேவையில்லை. பார்த்த உடனேயே எதையேனும் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் பேச்சை குறைத்தால் செயல் அதிகரிக்கும். அதிகமாக பேசும் ராசிகளும், அவர்களின் சில குண நலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்கள் அப்பட்டமானவர்கள், வெளிப்படையானவர்கள், நேர்மையானவர்கள். இவர்கள் மற்றவர்களைப் பிடிக்கவில்லை என்றால், அதை அவர்களின் முகத்தின் முன்னே சொல்வதற்கு சிறிதும் யோசிக்க மாட்டார்கள்.
இப்படி செய்வதன் மூலம் பலரின் நல்ல நட்பை இழக்க நேரிடுகிறது. சிலர் எதிரியாக கூட வாய்ப்புள்ளது. இவர்கள் தங்களின் நேர்மை, உண்மையானவர் என்ற குணத்தைக் காட்ட இப்படி செய்வதால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்வர்.
இவர்கள் தேவையான விஷயங்களை மட்டும் பேசினாலே போதுமானது. தங்களை நிரூபிக்க வேண்டும் என பேசும் விஷயங்கள் இவர்களுக்கு பிரச்னையாக அமையலாம்.
மிதுனம்
மிதுன ராசியினரைப் பொறுத்தவரை தங்களுக்கு தெரிந்த விஷயத்தை அதிகமாக பகிர வேண்டும் என நினைப்பார்கள். இது ஒருவகையில் நன்மை என்றாலும், சில ரகசியங்கள் அல்லது தேவையற்ற விஷயங்களையும் பகிர்வதால் சிக்கலில் சிக்கிக் கொள்வர்.
இவர்கள் யாரிடம் பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுவது நல்லது. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்கள் கேட்டுக் கொண்டாலும் அதை வெளியில் சொல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் தங்களின் வாழ்க்கையைப் பற்றி வெளியில் சொல்வதும், மற்றவர்களின் விஷயத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பதே சிறந்தது.
துலாம்
துலாம் ராசியினர் அனைவரையும் சமமாக பார்ப்பார்கள். இவர்களுக்கு தெரிந்த தகவல், திறமைகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த கற்றுத் தர நினைப்பார்கள். திறமைகளை கற்றுத் தந்தால் வாழ்த்து பெறலாம். ஆனால் மற்றவர்களின் வாழ்க்கை விஷயங்களை மற்றவருக்கு வெளிப்படுத்துவது அல்லது பகிர்வது பிரச்சினையைக் கொண்டு வரும்.
இவர்கள் தங்கள் சொந்த விஷயமாக இருந்தாலும், மற்றவர்கள் குறித்த ரகசியங்களையும் மற்றவர்களிடம் பகிராமல் இருப்பதே உன்னதமானது.
தனுசு
தனுசு ராசியினர் எந்த ஒரு குழு உரையாடிக் கொண்டிருந்தாலும் அவர்களிடம் எளிதாக சேர்ந்து கொள்ள முடியும். எதைப் பற்றி வேண்டுமானாலும் எளிதாக பேசும் வல்லமைப் படைத்த இவர்கள் ஒரு தலைப்பிலிருந்து மற்றொரு தலைப்பிற்கு எளிதாக மடை மாற்றி பேசக்கூடியவர்கள்.
தனக்கு எல்லாம் தெரியும் என்ற உங்களின் பேச்சு மற்றவர்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் அல்லது தயங்கச் செய்யும் செயலாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எந்த ஒரு ரகசியத்தையும் வெளியில் பேசுவதைத் தவிர்ப்பதோடு, பேச்சைக் குறைத்துக் கொண்டு மற்றவர்கள் சொல்வதை கவனிக்கத் தொடங்குங்கள். கற்றுக் கொள்ள முயற்சியுங்கள்.