முன்னாள் போராளி. பிரதேசசபை உறுப்பினர் யாழில் மரணம்!!

மாற்றுத்திறனாளிகளின் குரலாக எதிர்காலத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற ஆசை அவரது நண்பர்களிடம் துளிர் விட்டிருந்தது.
“”என்ன கொடுமை? ….. முள்ளந்தண்டில் செல் பீஷ் இருந்தது அது கடந்த சித்திரையில் சத்திரசிகிச்சை செய்தது. அதன் பின் அந்த இடத்தில் கிருமித் தொற்றாகி கிருமி மூளை வரை சென்ற நிலையில் ; கவனமற்ற நிலையில் மருத்துவம் தோல்வி கண்டுள்ளது .I C U வில் தான் இருந்தார் “”என அவரது நண்பர்களின் வேதனைகள் அளவிடமுடியாதவை.
ஆளுமையின் அர்ப்பணிப்பை இழந்து துயருறும் குடும்பத்திற்கும் அவரது நண்பர்களுக்கும் எம் இரங்கல்கள். சக்கர நாற்காலியில் இருந்தும் தளர்ந்து விடாமல் பல சரித்திரங்கள் படைத்தவன்.
தன் வலி பொறுத்து முடியுமானவரை பிறர் வலி தீர்த்தவன். உம் ஆத்மா சாந்தியடையட்டும்.