யாழில் லீசிங் கட்ட முடியாததால் தற்கொலை செய்த முன்னால் போராளி.

குடும்ப தகராறு சூழ்நிலை மற்றும் வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாத நெருக்கடி காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று (06) தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

அண்மைய நாட்களாக அவரது மனைவி பிரிந்து, தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மதுபோதையில் மனைவியை கடுமையாக தாக்கி வந்துள்ளார். இதன பொறுக்க முடியாமல் கடந்த சில தினங்களின் முன்னர், இரண்டு பிள்ளைகளுடன் தனது தாயார் வீட்டுக்கு மனைவி சென்று விட்டார்.

அத்துடன், கணவனின் தாக்குதல்கள் குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிவதரனின் வீட்டிற்கு சென்ற பொலிசார், அவரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அறிவித்து விட்டு சென்றனர்.

பொலிசார் சென்ற சிறிது நேரத்தில், மின்சார வயரை பாவித்து தூக்கில் தொங்கினார். உறவினர்கள் அவதானித்து, அவரை அதிலிருந்து மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார். இதேவேளை இன்று நடந்த பிரேத பரிசோதனையில், கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் அவர், நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக் கட்டணத்தில் வாகனத்தை வாங்கியுள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக அவரது தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிதி நிறுவனம் அவரிடம் கோரியுள்ளது.

அத்துடன், அந்த நிறுவனத்தின் அலுவலகர்கள் அவரிடம் சென்று பணத்தைக் கோரியுள்ளனர். தன்னிடம் 35 ஆயிரம் ரூபாய்தான் தற்போது உள்ளது. மிகுதியை கிடைத்தவுடன் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நிதி நிறுவன அலுவலகர்கள் அவரை ஏசியுள்ளனர்.

இந்த நிலையில் மன விரக்தியில் அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்” என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் போராளினெ தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad