அமெரிக்காவில் 14 வயது சிறுமியை நள்ளிரவில் வீட்டுக்கு வரவழைத்து சீரழித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெனோஷா கவுண்டியை சேர்ந்தவர் செவர்லோட் மேஷன் (18). இவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயதான சிறுமி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், மேஷனை நேரில் ஒரு முறை தான் பார்த்தேன், பின்னர் ஷனாப் ஷாட் மூலம் தொடர்ந்து இருவரும் பேசினோம். கடந்த 6ஆம் திகதி என்னிடம் முக்கியமான விடயம் பேச வேண்டும் என கூறி நள்ளிரவு மேஷன் தனது வீட்டுக்கு அழைத்தான். இதையடுத்து 12.30 மணிக்கு அங்கு சென்றேன்.
அப்போது மேஷனின் பெற்றோர் வீட்டில் தூங்கிய நிலையில் நானும் மேஷனும் டிவி பார்த்தோம்.
அப்போது எனக்கு மேஷன் கொடுத்த தண்ணீரை குடித்ததும் மயக்கம் ஏற்பட்டது. பின்னர் என் மீது அவன் பாலியல் தாக்குதல் நடத்தினான், அரை மயக்கத்தில் நான் தடுக்க முயன்றும் மேஷன் கேட்கவில்லை, இதோடு என்னை அடித்தான் என தெரிவித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து பொலிசார் மேஷனை கைது செய்தனர். அப்போது சிறுமியை யார் என்றே தெரியாது என முதலில் சொன்ன மேஷன் பின்னர் தெரியும் என கூறினான்.
இதன் பின்னர் சிறுமிக்கு முத்தம் மட்டுமே கொடுத்தேன் என கூறிய அவன், சிறிது நேரத்தில் சிறுமியின் ஒப்புதலோடு அவருடன் உறவு கொண்டேன் என மாற்றி மாற்றி கூறினான்.
கைது செய்யப்பட்ட மேஷனிடம் தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவன் ஜாமீன் தொகையாக $15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.