கொழும்பு காதலியின் அந்தர ங்கம். 14 லட்சம் கேட்ட யாழ் காவாலி.

தனது பேஸ்புக் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதெனில் 14 இலட்சம் ரூபா தனக்கு தர வேண்டுமென தற்போது பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாண வாசியொருவர் கப்பம் பெற முன்றுள்ளார்.

வெள்ளவத்தையை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரிடமிருந்தே கப்பம் கோரப்பட்டது. கப்பத்தின் ஒரு பகுதியாக 7 இலட்சம் ரூபாவை பெற வந்த இரண்டு இளைஞர்கள் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேஸ்புக்கில் வீசிய காதல் வலையில் வெள்ளவத்தையை சேர்ந்த 33 வயதான இளம்பெண்ணொருவர் சிக்கியுள்ளார். பேஸ்புக் காதலனை நம்பி ஏடாகூடமான புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டிய இளைஞன், படங்களை வெளியிடாமல் இருப்பதெனில் 14 இலட்சம் ரூபா தர வேண்டுமென கூறியுள்ளார்.

அந்த பெண் பொலிசாரின் உதவியை நாடியையடுத்து, இன்று 7இலட்சம் ரூபா கப்பம் வழங்குவதாக வைக்கப்பட்ட பொறியை நம்பி, இரண்டு இளைஞர்களை அந்த நபர் அனுப்பினார். இரண்டு இளைஞர்களும் யூனியன் பிளேஸில் கைது செய்யப்பட்டனர். கொம்பனித்தெருவை சேர்ந்த இரண்டு இளைஞர்களே கைதாகினர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad