இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கற்கள்-போட்டிபோடும் வெளிநாட்டவர்!

இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை (Sapphire Cluster) கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக் கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

510 கிலோகிராம் எடை கொண்ட இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது.

இதேவேளை இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad