காணாமல் போன 14 வயது சிறுவன்!

 


இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷான் என்ற 14 வயதான சிறுவன் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சகோதரிகள் மற்றும் தாயுடன் வசித்துவந்த லக்ஷான் கடந்த 24 ஆம் திகதி அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

லக்ஷான் வீட்டிலிருந்து காணாமல்போன தினத்தன்று அவர் வீட்டிலிருந்து வெளியேறும் காட்சி அருகிலிருந்த சிசிரீவி கமராவில் பதிவாகியுள்ளது.

சிறுவன் பையொன்றுடன், தனது கைபேசியை பார்த்தவாறு செல்வதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

காணாமல்போன சிறுவனைத் தேடி 4 ஆவது நாளாகவும் காவல்துறையினர் இன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுவன் லக்ஷானின் தந்தை மட்டக்களப்பு காவல்நிலையத்தில், கடமையாற்றி வருவதுடன், தனது மகன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு எந்தவொரு காரணமும் இருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரத்தினபுரி காவல்துறையினர், இது ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக முன்னெடுக்கப்படும் குற்றச்செயலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், காணாமல்போயுள்ள சிறுவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தால் இரத்தினபுரி காவல்நிலையத்துக்கு அறிவிக்குமாறு, காவல்துறையினர் கோரியுள்ளனர்.