முறைப்பாடு செய்ய சென்ற 15 வயது சிறுமியை விட்டு வைக்காத பொலிஸ் அதிகாரி கைது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றிருந்த 15 வயது சிறுமியை முத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நெலுவ மேல் கிகும்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர்

தனது தாயுடன் நேற்று முன்தினம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

விசாரணைகளுக்காக தன்னையும் தனது மகளையும் இரவு வரையில் பொலிஸ் நிலையத்தில் தங்கி இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில்

அவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.எவ்வாறாயினும், காலை பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாம் தங்கியிருந்த அறைக்கு வந்து

தனது மகளை முத்தமிட்டதாக தாய் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ள சிறுமி இளைஞன் ஒருவனை காதலித்து

பெற்றோருக்கு தெரியாமல் அவரை சந்திக்க சென்றுள்ளார். இதன்போது, குறித்த இளைஞனால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில்

இளைஞன் சிறுமியின் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி குறித்த இளைஞன் சிறுமியை பல முறை

அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் அறிந்து கொண்ட பின்னர் இளைஞனை பிடித்து

பொலிஸில் ஒப்படைத்துள்ள நிலையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நேற்று பொலிஸ் நிலையம் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad