9வது மாடியிலிருந்து குதித்த கணவன், மனைவி!


கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள கிராசிங்ஸ் ரிபப்ளிக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவன், மனைவி இருவரும் 9வது மாடியில் வசித்து வந்துள்ளனர்.

கணவர் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 13ம் தேதி ஏற்பட்ட சண்டையில், தற்கொலைக்கு முயன்ற மனைவி 9வது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த கணவர் அவரைக் காப்பாற்ற முயற்சித்து அவரது கைகளைப் பிடித்துள்ளார். மாடியிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மனைவி பின்பு தான் பயம் ஏற்பட்டுள்ளது.

மனைவி எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டுள்ள நிலையில், இவர்களின் சத்தம் கேட்டு எதிர் பகுதியில் இருந்தவர்கள் ஒடி வந்துள்ளனர்.

அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனைவி தனது கையை விட்டுள்ள நிலையில், கீழே விழுந்தார். அதன் பின்பு அவரைத் தொடர்ந்து அவரது கணவரும் கீழே விழுந்துள்ளார்.

இதில் மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 






Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad