எருமையில் வந்த எமன். கொடூர விபத்து!! இளைஞன் பலி!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 24 வயதான இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

நேற்றுய தினம் அதிகாலை 4.30 மணிக்கு முத்தையன் கட்டுப்பகுதியில் இருந்து கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலைசெய்யும் இளம் யுவதியினை கொக்குத்தொடுவாய் பகுதிக்கு உந்துருளியில் ஏற்றி சென்ற வேளை புளியங்குளம் பகுதியில் எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது வவுனியாவினை சேர்ந்த 24 அகவையுடைய நிலோஜன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் உந்துருளியில் பயணித்த யுவதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். உயிரிழந்த இளைஞனின் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீதியில் புளியங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் எருமை மாடுகள் நிற்பதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad