பயண தடை குறித்து சற்று முன் வெளியான தகவல்! பொதுமக்களுக்கு மரண நிகழ்வு அல்லது திருமண நிகழ்வுகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஆனால், குறித்த தேவைகளுக்காக நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதேபோல், இரண்டு மாகாணங்களை சேர்ந்த குடும்பங்களில் திருமண நிகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் அதன்போது, இரு வீட்டார் மாத்திரம் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

அத்துடன், திருமண நிகழ்வுகளில் 150 உறுப்பினர்கள் மாத்திரம் பங்குக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெனான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மக்கள் கோவிட் வைரஸ் தொற்றுடன் இயல்பு வாழ்க்கையை கொண்டு செல்ல பழகவேண்டும் எனவும் தெரிவித்தார்.