நண்பர்கள் செய்த செயல்-திருமணமான நாள் அன்றே பிரிந்த ஜோடிகள்! இலங்கையில் திருமணமான தமது நண்பனிற்கு ஆச்சரியமான வரவேற்பளிக்கிறோம் என்ற பெயரில் நண்பர்கள் செய்த இழிவான செயலால், திருமண நாளிலேயே ஒரு ஜோடி பிரிந்தது.

இந்த சம்பவம் தம்புள்ளை பகுதியில் நடந்ததுள்ளது.

நண்பர்களின் மோசமாக செயலை சகித்துக் கொள்ளும் மாப்பிள்ளை, தனது மகளை நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டார் என கூறி, தனது மகளை மணக்கோலத்துடனேயே தந்தை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.  

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

தம்புள்ளை பகுதியில் வசிக்கும் இருபத்தெட்டு வயதான இளைஞர் ஒருவர், தனியார் துறையில் பணிபுரிந்தார். அவருக்கு நிறைய நண்பர்கள். நண்பர்களுடன் வேடிக்கையான பொழுதை போக்குவது அவருக்கு முக்கியமான ஒன்று. 

இந்நிலையில் ஊருக்கு வரும் மாப்பிள்ளையை தடல்புடலாக வரவேற்க வேண்டாமா என இளைஞனின் நண்பர்களிற்கு யோசனை தோற்றியது. அதுதான் விவகாரமாக மாறி, இப்போது விவகாரத்தில் வந்து நிற்கிறது.

திருமண ஜோடி ஊருக்கு வந்த வாகனத்தை நடு வீதியில் திடிரென வழிமறித்த நண்பர்கள், அந்த ஜொடியை வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படி கூறினர். நண்பர்பன் என்ற பெயரில் கொடூரர்களை போல நின்றவர்களை பார்த்து பயமடைந்த மணப்பெண், மணமகனை காரை விட்டு இறங்க வேண்டாமென்றார்.

உடனடியாக இருவரும் இறங்காவிட்டால் தாம் என்ன செய்வோமென்பதே தெரியாது, உடனே இறங்குங்கள் என அவர்கள் மிரட்டல் விட்டனர். மணமகன் இறங்க முயல, மணமகள் தடுக்க, இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதனை சகித்துகொள்ளாத தந்தை தனது மகளை மணக்கோலத்துடனேயே வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

Tags

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.