ஆபாச வீடியோ அனுப்பிய நபர்கள்-ஆணுறுப்பை அறுத்துவிடுவேன் என கூறிய வீர தமிழச்சி!

 ஆபாச வீடியோ அனுப்பிய 2 நபர்கள், 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால், விபரீத பனிஸ்மென்ட் வழங்கப்போவதாக அரிவாளுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளார் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி. இவர் தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனராக உள்ளார்.

மேலும், அண்மையில் மேகதாது அணையை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்த கலந்தாலோசனையில் இருந்தபோது ஆபாச வீடியோ வந்ததாகக் கூறுகிறார். வீரலட்சுமி. இதுபோன்ற சம்பவங்களில் ஏற்கெனவே கொடுத்த புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், கையில் அரிவாளுடன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், ஆபாச வீடியோ அனுப்பிய 2 நபர்கள், 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால், அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் அந்த மாதிரி தண்டனை ஒன்றை வழங்க உள்ளதாக பகீர் கிளப்பியுள்ளார்.

மேலும், ஆபாச படம் அனுப்பிய இருவருக்கும் 15 நாட்களில் தான் கொடுக்க உள்ள விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கையில் அரிவாளோடு வீரலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனக்கு அரசியல் பலம், படை பலம், பண பலம் அனைத்தும் இருப்பதால், நீதிமன்றத்தில் பணம் செலவு செய்து தான் நீதியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும், ஆனால் சாதாரண தமிழ்ப்பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.