திருமண நிகழ்வில் சிறுமியை பலாத்காரம் செய்த நபர்!

 


பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற  யாழை பூர்வீகமாக கொண்ட  பதின்ம வயதான சிறுமியிடம் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர்  தகாத முறையில் நடந்துகொண்டமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

சுவிஸ்லாந்தில்  வசிக்கும்   யாழ்ப்பாணத்தை  பூர்வீகமாகக் கொண்ட  தாயும்,  பதின்ம வயதான  மகளும் உறவினர் ஒருவரின் மகளின் திருமண நிகழ்விற்கு    பிரான்ஸ் சென்றுள்ளனர். 

இதன்போது திருமண  நிகழ்வில் தாய் கலந்து கொண்டிருக்கையில்  திருமண வீட்டுக்கு வந்திருந்த மாப்பிளையின் நண்பனான இளம்  குடும்பஸ்தர்  ஒருவர்   சிறுமியை வெளியே அழைந்துச்சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

திருமண நிகழ்வில் நீண்ட நேரமாக மகளைக் காணாத  தாயார் கார் தரிப்பிடத்தில் உள்ள கார் ஒன்றிற்குள் மகள் நுழைந்ததைக் கண்டதாக சிறுவன் ஒருவன் கூறியதை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது மகள் காரில் அலங்கோலமான நிலையில்  இருந்ததைக் கண்டு அவர்  அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து திருமண  நிகழ்விற்கு வந்தவர்கள் அங்கு சென்று,  சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட  குடும்பஸ்தரைத் தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதேவேளை  குறித்த நபர் சிறுமியுடன்  காரில் இருக்கையில், தனது   செல்போனில்  அதனை வீடியோ எடுத்ததாக தெரியவந்த நிலையில், அங்கு கூடி இருந்தவர்கள்  தொலைபேசியை  அடித்து உடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதன் பின்னர் தாயாரை மாப்பிளை வீட்டார் சமாதானப்படுத்தி மகளுடன் சுவிஸ்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டவர்,  கிளிநொச்சியை  பூர்வீகமாக கொண்டவர் என்றும்,   மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை புலம்பெயர் தேசத்தில் சிறுமியிடம்  நடத்தை பிறழ்வாக நடந்துகொண்டவர் தொடர்பில்  பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளதுடன்,  நிகழ்வுகளுக்கு  பிள்ளைகளை அழைத்துச் செல்கையில் பெற்றோர்கள் அவர்கள் தொடர்பில் விழிப்புடன்  இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad