நீர்வேலியில் விபத்து. 24 வயது இளைஞன் மரணம்.

நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்று (18) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளான்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளான்.

அதன் போது , கட்டில் காணப்பட்ட இரும்புக்கம்பி அவரது நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags

Top Post Ad

Below Post Ad