வெறியில் யாழ் இளைஞனின் அட்டகாசம். சுட்டுப் பிடித்த பொலிஸ்.

யாழ்ப்பாணத்தில் மதுபோதையின் உச்சத்தின் தாயாரை கொடூரமாக தாக்கிய குடிகார மகனை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கைது செய்ய வேண்டிய நிலைமையேற்பட்டது.

மதுபோதையின் உச்சத்தில் பொலிசாரை வாளால் வெட்ட முயன்ற போதே, பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இளைஞரை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இன்று (28) காலை கோண்டாவில், செபஸ்ரியன் வீதியில் இந்த சம்பவம் நடந்தது.

மதுபோதையில் இளைஞன் ஒருவர் தனது தாயாருக்கும், அயல்வீட்டினருக்கும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அவர்கள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்தனர்.

கோப்பாய் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பொலிசாரை வெட்டுவதற்கு வாளை எடுத்துக் கொண்டு மதுபோதைய இளைஞன் ஓடி வந்துள்ளார்.

இதையடுத்து, பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை கட்டுப்படுத்தினர்.

கைதான இளைஞன் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மதுபோதை உச்சத்தில் இருப்பதால், அவர் நிதானமின்றி காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.