யாழில் இரண்டு பேரை காதலித்த யுவதியின் காதல் லீலை.

யாழில் ஒரு யுவதி, இரண்டு பேரை காதலித்ததால், இருவரும் நேரில் அழைக்கப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு கழுத்தை நீட்டியுள்ளார்.
சினிமா பாணியிலான இந்த முக்கோண காதல் கதை, கடந்த வாரம் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியொன்றில் நடந்துள்ளது.

யாழில் இயக்கப்பட்ட குறும்படங்கள் சிலவற்றில் நடித்த யுவதியொருவர், யாழ் நகரிலுள்ள புகைப்பட கலையகத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

சில மாதங்கள் இந்த காதல் நீடித்த நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் முல்லைத்தீவு இளைஞன் ஒருருடன் யுவதிக்கு பேஸ்புக் காதல் உருவாகியுள்ளது. பேஸ்புக் காதல் தெய்வீக காதலாக உருமாற, போட்டோக்காரரை யுவதி கைகழுவி விட்டுள்ளார்.

எனினும், தன்னுடைய காதலும் தெய்வீக காதல்தான் என்பதை போட்டோக்காரரும், யுவதியிடம் நிரூபிக்க முயன்றுள்ளார். தனது உடலில் யுவதியின் பெயரை கீறி, இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

அவ்வளவுதான் யுவதியின் மனம் இளகி விட்டது.கைக்குள்ளேயே ஒரு தெய்வீக காதலனை வைத்துக் கொண்டு, எதற்கு பிரித்தானியாவிற்கு கடலை போட வேண்டுமென நினைத்து, பழைய காதலனுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

விடயத்தை அறிந்த பிரித்தானிய காதலன் பதறிப் போனார். விட்டால் போட்டோக்காரர் கொத்திச் சென்று விடுவார் என நினைத்து, கடந்த மாதம் இலங்கை வந்துள்ளார். யுவதியை தொடர்பு கொண்டு உடனடியாக திருமணம் செய்ய கேட்டுள்ளார்.

யுவதி மறுத்ததும், யுவதியின் வீட்டுக்கு சென்று, முறைப்படி பெண் கேட்டுள்ளார்.

விடயத்தை அறிந்ததும், போட்டோக்காரனும் யுவதியின் வீட்டில் பெண் கேட்டு சென்றார். தமது மகளின் காதலர்கள் என அடுத்தடுத்து இரண்டு பேர் பெண் கேட்டு வந்ததால், வீட்டுக்காரர் ஆடிப் போயினர்.

மகளிடம் விசாரித்த போது, இருவரில் யாரை திருமணம் செய்வது என தெரியாமல் அவர் திண்டாடிக் கொண்டிருந்ததை அறிந்தனர்.

திருமண விவகாரத்தில் இரண்டு இளைறுத்களிற்குள்ளும் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், கடந்த வார தொடக்கத்தில், கொக்குவில் பகுதியிலுள்ள யுவதியின் மாமாவின் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டு தரப்பின் நண்பர்கள் சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

யுவதியை யார் திருமணம் செய்வது என்பது பற்றி, இருவரும் பேசி, ஒருவரை தெரிவு செய்யும்படி கேட்கப்பட்டிருந்தது. சில மணித்தியாலங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், போட்டோக்காரர் இந்த விவகாரத்திலிருந்து ஒதுங்குவதாக கூறினார்.

கடந்த வாரம் பிரித்தானிய மாப்பிள்ளைக்கும், காதல் ராணிக்குமிடையில் திருமணம் நடந்தது.

Top Post Ad

Below Post Ad