பிரபல வைத்தியசாலையில் COVID பணியில் இருந்த தாதியர் பலாத்காரம்.. 2 காமவெறி மருத்துவர்கள் கைது.!

ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் மருத்துவரை வெற்றிச் செல்வன் பலாத்காரம் செய்தார். மற்றொரு பெண் மருத்துவரிடம் வேறொரு டாக்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மிகவும் பிரபலமானது சென்னையில் செயல்படும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையாகும். உலகத் தரம் வாய்ந்த அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ள இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திறமையான மருத்துவர்கள் இங்கு பணியாற்றுவதால் தமிழ்நாட்டில் இது முதன்மையான மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது. கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது அனைத்து நோயாளிகளும் இந்த மருத்துவமனையை நோக்கியே படையெடுத்தனர். நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழிந்ததை அடுத்து மற்ற மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. 

தனியாக கொரோனா சிகிச்சை முகாம்களும் செயல்பாட்டிற்கு வந்தன. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்த மருத்துவமனையில் பிரபலமான மருத்துவ நிபுணர்கள், பயிற்சி மருத்துவர்கள், ஏராளமான செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா முதல் அலையின் போது மருத்துவமனை நிரம்பி வழிந்ததால் தற்காலிக செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்களும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டனர். உயிரையும் துச்சமென கருதி கொரோனா பாதித்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்படமால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். 

அந்த வகையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டதால் அரசு இந்த இடைக்கால ஏற்பாட்டைச் செய்தது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவர்கள், ஆண் மருத்துவர்கள் என அனைவரும் ஒரே நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த சமயத்தில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த வெற்றிச் செல்வன் என்ற மருத்துவர், பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அதேபோல் மற்றொரு மருத்துவரான மோகன் ராஜ் என்பவர், வேறொரு பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் இருவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீனிடம் புகார் அளித்தனர். இந்தப் புகார்கள் குறித்து தனியாக குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு அரசு மருத்துவர்களும், பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த தேனாம்பேட்டை போலீஸார், வெற்றிச் செல்வன், மோகன் ராஜ், ஆகிய இருவரையும் நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். 

அவர்கள் இருவரும் பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் வெற்றிச் செல்வன், மோகன் ராஜ் இருவரையும் பணி நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்மையாக விளங்கும்  ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

உலகின் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சையின் போது பெண் பணியாளர்கள், நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் தமிழ்நாட்டில் அந்தக் கொடுமை மருத்துவர்களுக்கே நடந்தேறியிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad