பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சி நகரின் வங்கி கட்டிடம் ஒன்றிற்கு அடிப்பகுதியில் இருக்கும் பாதாள சாக்கடையின் கால்வாயில் திடீரென்று, பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், வங்கி கட்டிடம் அதிர்ந்து, அதன் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் வாகனங்களும் சேதமடைந்ததில் 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் 12 நபர்களுக்கு காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கழிவுநீர் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது.
எனினும், வெடி விபத்திற்கான உண்மைக் காரணம், ஆய்வு மேற்கொண்ட பின்பு தான் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். கட்டிடத்தின் இடிபாடுகளில் பல மக்கள் மாட்டிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுவதால், மீட்புக்குழுவினர் இடிபாடுகளை நீக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.