13 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிக்க முயன்ற தந்தை கைது!

தனது மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

மேற்குறித்த சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் திங்கட்கிழமை (6) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது சுமார் 13 வயது மதிக்கத்தக்க மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை இரவு கொழும்பிற்கு தப்பி செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரப்பிடத்தில் மறைந்திருந்த போது காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன் இவரது மனைவி மத்தியகிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதாகிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad