வவுனியா வடக்கு பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் மீண்டும் தோல்வி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் இன்று (07) தோற்றகடிக்கப்கட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதனை மீள திருத்தி இன்றைய தினம் (07) சபை தவிசாளர் எஸ்.தணிகாசலத்தினால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து வரவு செலவு திட்டம் தொடர்பான வாதங்கள் இடம்பெற்றதுடன், வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எப், சிறிலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உள்ளடங்கிய 17 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி ஒரு உறுப்பினருமாக 9 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி 9 மேலதிக வாக்குகளால் வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad