கொழும்பு – ஹங்வெல்ல,துன்மோதர ஆற்றில் நீராடச்சென்று காணாமல்போன மூவரில், 14 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தெரியவந்துள்ளது.
இதன்போது காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த குழுவினரே அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.