இந்த கிழவியை பார்த்தாலே எல்லாரும் நடுங்குவார்கள்- 2022ல் பேராபத்து காத்திருக்கு!”…. முன்கூட்டியே கணித்த ‘பாபா வங்கா

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா என்ற மூதாட்டி 12 வயதில் சூறாவளி ஒன்றில் சிக்கி தனது கண் பார்வையை பறிகொடுத்தார். அதன் பிறகு பாபா வங்கா, “எதிர்காலத்தை கணிக்கும் அபூர்வ சக்தியை கடவுள் தனக்கு கொடுத்துள்ளார்” என்று கூறிவந்தார். பின்னர் பாபா வங்கா கடந்த 1966-ஆம் ஆண்டு தனது 84-வது வயதில் உயிரிழந்தார். இருப்பினும் அவர் இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கக்கூடிய பயங்கரமான மற்றும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே கணித்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இது தான் பெரும் பிரச்சனை… ஏன் என்றால்..

ஏற்கனவே பாபா வங்காவின் கணிப்புகள் பல உண்மையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அதாவது பாபா வங்கா முன்கூட்டியே கணித்திருந்த இளவரசி டயானா மரணம், அவர் சொல்லியது போலவே நடந்தது. சோவியத் யூனியன் சீர்குலைவு, அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்பார் என்று கூறினார் நடந்தது. 2004-ல் தாய்லாந்தை சுனாமி தாக்கும் என்றார். அதுவும் நடந்தது. அந்த வகையில் இந்த உலகம் 5079-ஆம் ஆண்டில் பூமி முடிவுக்கு வரும் என்று அவர் கணிப்பில் கூறியுள்ளார். எனவே 5079ம் ஆண்டோடு பூமி முற்றாக அழிந்து விடும், இல்லையேல் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்பது இவர் கணிப்பு. அதனை போலவே பாபா வங்கா 2022-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் ? என்பது குறித்த பல்வேறு சம்பவங்களை கணிப்பில் குறிப்பிட்டு வைத்து விட்டு சென்றுள்ளார்.

பாபா வங்கா கணித்து வைத்துள்ள 2022-ஆம் ஆண்டில் நடக்க போகும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் :-

1. வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை தாக்கி அழிப்பதோடு நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடும்.

2. உலகில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமப்படுவார்கள்.

3. நதிகளில் ஏற்படும் மாசுபாடு காரணமாக தண்ணீர் பற்றாக்குறையும் போர் உருவாகும் அபாயமும் ஏற்படும்.

4. ஆஸ்திரேலியாவும், ஆசிய நாடுகளும் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்படும்.

5. அடுத்தடுத்த சுனாமி ஆபத்து, ஏராளமான பூகம்ப சம்பவங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

6. ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமியின் காரணமாக மரணத்தை சந்திப்பார்கள்.

7. ஸ்வீடன் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் குழு கொடிய வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கும்.

மேலும் 2022-ஆம் ஆண்டுக்கான கணிப்பில் பாபா வங்கா, அதிக அளவில் கணினி பயன்பாடுகள் சார்ந்ததாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். அதேபோல் மக்கள் முன்பை காட்டிலும் அதிக நேரத்தை திரைகளின் முன்பு செலவிடுவார்கள் என்று கணித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், வேற்றுக் கிரகம் ஒன்றை தேடி, பூமியில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு கோளை அனுப்புவார்கள் என்று அவர் முன் கூட்டியே தெரிவித்துள்ள கருத்து தான் மிக மிக அசத்தலானது. காரணம் நாசா 2021ல் அனுப்ப இருந்த செயற்கை கோள் ஒன்றை, தற்போது 2022ல் தான் அனுப்ப உள்ளது. அது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு இடத்திற்கு சென்று தேடுதலில் ஈடுபட உள்ளது, என்பது உண்மை. இதனை அவர் எப்படி துல்லியமாக கணித்தார் என்பதே பெரும் கேள்விக் குறி…. ஆனால் உண்மை.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad