இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட விமானம்; மூவருக்கு நேர்ந்த கதி!

கட்டான கிம்புலபிட்டிய பகுதியில் பயணிகள் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான சேவை நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் இருந்து சிகிரியாவிற்கு சுற்றுலா பயணிகளுடன் பயணித்த தனியார் விமானம் மீண்டும் கொக்கல நோக்கி பயணித்த போதே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது விமானி உட்பட காயமடைந்த மூவரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 720 156 146 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.