கனடாவில் மாயமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த அர்ஜனன் சடலமாக மீட்பு.

 கனடாவில் இலங்கையர் ஒருவர் மாயமான நிலையில், அவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் அவசர மருத்துவ உதவியாளராக பணியாற்றிவந்த இலங்கையரான அர்ஜனன் சிவசத்தியராஜா (Arjanan Sivasathiyarajah), பணி நிமித்தமாக படகில் சென்ற நிலையில் கடந்த 3ஆம் திகதி மாயமாகியுள்ளார்.

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 5ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், Kashechewan நதியில் அர்ஜனனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் நதியில் தவறிவிழுந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றார்கள்.

2017ஆம் ஆண்டு அர்ஜனனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தன் தந்தைக்கு தன்னால் எந்த உதவியும் செய்யமுடியவில்லையே என வருந்திய அர்ஜனன், அந்த சம்பவத்தின் தாக்கத்தால் அவசர மருத்துவ உதவியாளராக பணி செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர் புதிதாக பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில் தனக்குப் பிடித்த வேலையின்போதே மரணமடைந்துள்ளார். இந்த தகவலை அர்ஜனனின் சகோதரரான காஞ்சனன் (Kajanan Sivasathiyarajah) தெரிவித்துள்ளார்.

அர்ஜனன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில், இளம் வயதில் தங்கள் பிள்ளையை இழந்துள்ள அவரது குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.



Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad