புதுவருட தினமான கடந்த வியாழக்கிழமை(01) மருதங்கேணிப் பகுதியில் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸார், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரை பிரதான சந்தேகநபராகக் கைது செய்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அந்த நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

