“இனிமேல் 21+ தான்!”… திரைப்படங்களில் காட்சிகள் நீக்கப்படாது…. அதிரடியாக அறிவித்த பிரபல நாடு….!!

அமீரகத்தில் சர்வதேச அளவிலான, பெரியவர்கள் பார்க்கும் திரைப்படங்களில் காட்சிகள் நீக்கப்படாது எனவும் அந்த படங்களை பார்க்க குறைந்தது 21 வயது இருக்க வேண்டும் என்றும் அமீரக அரசின் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் கூறியிருக்கிறது. இது தொடர்பில் வெளியான அறிவிப்பில், “பிற நாடுகளில் இருப்பது போன்று அமீரகத்திலும் திரைப்படங்களை காணும் பார்வையாளர்களின் வயது கணக்கிடப்படுகிறது.

இதில் பெரியவர்கள் மட்டுமே காணக்கூடிய திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதி கிடையாது. அதற்கான வயது 18 ஆக இதற்கு முன்பு இருந்தது. இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, பெரியவர்கள் காணும் திரைப்படங்களுக்கான வயது 21-ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இது மட்டுமன்றி சர்வதேச அளவில் பெரியவர்கள் காணக்கூடிய திரைப்படங்கள் தணிக்கையில் காட்சிகள் நீக்கப்படாமல் அப்படியே சர்வதேச பதிப்பில் திரையிடப்படும். அந்தத் திரையரங்குகளுக்கு செல்ல குறைந்தது 21 வயது இருக்க வேண்டும். மேலும், இத்திரைப்படங்களைப் பார்க்க செல்பவர்கள், தங்கள் வயதிற்கான ஆவண சான்றிதழை கட்டாயமாக காண்பிக்க வேண்டும்.

வீடுகளிலும், விமானங்களிலும் காண்பிக்கப்படும் திரைப்படங்களில் தான் காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டு, சிறுவர்கள் பார்க்கும் வகையில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடிய விரைவில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad